தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 81,515 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 2,14,957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 1,53,373 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/19/archana-patnaik-ias-pm-our-1-2025-12-19-18-29-07.jpg)
அதே சமயம் சென்னையைப் பொறுத்தவரையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்த வாக்குகளில் 35.58% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக சென்னையில் 40.04 லட்சம் வாக்குகள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25.79 லட்சம் வாக்குகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் எஸ்.ஐ.ஆருக்கு பிறகு ஆண் வாக்காளர்கள் 12,47,690 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 13,31,243 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 15.18% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆருக்கு முன்னதாக 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/archana-patnaik-ias-pm-our-2025-12-19-18-28-18.jpg)