Advertisment

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வருகை!

gyaneshelection

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிராம மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. 

Advertisment

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) நேற்று (23.02.2026) வெளியிட்டனர். அதாவது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த தமிழக அளவிலான இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்நிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாளை (25.02.2026) தமிழகம் வருகிறார். 

Advertisment

பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27 வரை என மூன்று நாள் பயணமாகத் தமிழகம் வரும் அவருடன், ஏழு துணை தேர்தல் ஆணையர்களும் உடன் வருகின்றனர். இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இந்த குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி சென்னையில் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

eci

இவரது தமிழ்நாடு வருகையைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் ஏற்கனவே தமிழகத்தில் முதற்கட்ட ஆய்வுகளை நடத்திய நிலையில், தற்போது தலைமை தேர்தல் ஆணையரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Assembly Election 2026 election commision of india Chief Election Commissioner Gyanesh Kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe