Advertisment

விமர்சையாக நடைபெற்ற சிதம்பரம் நந்தனார் மடம் மகா குடமுழுக்கு

760

Chidambaram Nandanar Math Maha Kudamuzhu held in a grand manner Photograph: (cuddalore)

நந்தனார் மடத்தை சிறப்பாக நவீனமயமாக புதுப்பித்து  குடமுழுக்கு விழாவை நடத்திய நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்து, சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

சிதம்பரம்  ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் சுவாமி சகஜானந்த சமாதி கோயில், சௌந்தரநாயகி சிவலோகநாதர் கோயில் உள்ளது.  இது 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜன 28-ந்தேதி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நந்தனார் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனார் மற்றும் சுவாமி சகஜானந்தா வரலாறுகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

கோவில் நவீன முறையில் புனரமைப்பு, கும்பாபிஷேக ஏற்பாடுகளை நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ மணிரத்னம் தலைமையில், செயலாளர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், கல்விக் கழக உறுப்பினர்கள் பாலையா, சங்கரன், பன்னீர்செல்வம், கற்பனைச் செல்வம், ஆலோசகர் தெய்வநாயகம்,  நிர்வாக குழு செயலாளர் வினோபா, நிர்வாகிகள் மற்றும் கமல் மணிரத்னம், அரவிந்த் மணிரத்னம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உறுதுணையோடு நடைபெற்றது.

இதில் சிதம்பரம் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், நந்தனார் பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் உள்ளிட்ட பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். குடமுழுக்கு நடைபெற்ற நந்தனார் மடத்திற்கு மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்து பல லட்சங்கள் செலவு செய்து சிறப்பாக நந்தனார் மடத்தை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்திய நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இந்த விழாவுக்கு உறுதுணையாக இருந்த கல்விக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள சாமி சகஜானந்தா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இவருடன் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையா, பழ. வாஞ்சிநாதன், நகரச் செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், ஓய்வூதிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் பழனி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்  மற்றும் நந்தனார் கல்விக் கழக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Cuddalore Festival
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe