Chidambaram Govindaraja Perumal Temple Kumbabhishekam
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்து அறநிலை துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், இக்கோயிலில் நவம்பர் 3-ந்தேதி கும்பாபிஷேகம் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதனையொட்டி யாகசாலை பூஜை கடந்த 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்கு சிதம்பரம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோவிலில் குவிந்தவாறு உள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்திற்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இடம் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தின் போது எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
Follow Us