Chennai Sangamam! -Kanimozhi MP composed the song Photograph: (kanimozhi)
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கலை நிகழ்ச்சி இன்று (14/01/2026) மாலை 6 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார். இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவில் பாடப்படவுள்ள பாடல் வரிகளை, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுதியுள்ளார். அந்தப் பாடல் வரிகள்:
வானமில்லை பூமியில்லை
வாளுமில்லை போரும் இல்லை
நோயுமில்லை சாவுமில்லை
நாடுமில்லை வேலியில்லை
சாதியில்லை மதமுமில்லை
ஏற்றமில்லை
வறுமையில்லை
எல்லையற்ற அன்புதான்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
வாழ்வின் வளங்கள்
நமது தான்
அழகே தமிழே ஒளியே
உயிரே
எம்மைச் சேர்க்கும்
பற்றுக்கோடு ஒன்றுதான்
மொழியே தருவே
உயிரே உறவே
எத்தனை பகை
திரண்டு நின்றாலும்
உரிமைதனைப் பறிக்க நினைத்தாலும்
எழுவோம் ஒன்றாய்
முரணாய் அரணாய்
எம்மை கோர்க்கும் சேர்க்கும்
பெருமைக் கோடு ஒன்றுதான்
பெருகும் அழகே தமிழே
முக்கடல் ஆண்ட மூவேந்தன்
மூத்தோன் எழுதிய கதிரின் ஒளியே
அருவிநீர் போல
காற்றின் மீதேறி
காலம் உரமேற்றும்
வாழும் என் மொழியே
பகை பலவந்தாலும்
வேடம் தரித்தாலும்
விஷத்தை விதைத்தாலும்
உரிமைதனை பறித்தாலும்
எழுவோம் அரணாய்
திராவிட முரணாய்
தொடுவானம் தூரமில்லை
சொல்லும் பகை என்றுமில்லை
எங்கும் தமிழ் வெல்லும் தமிழ்
உரக்கச் சொல்வோம்
சேர்ந்து சொல்வோம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
வெற்றி நிச்சயம்.
Follow Us