தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலை விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார்.

Advertisment

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. 20 இடங்களில் (15/01/2026) முதல் (18/01/2026) வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம் - அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் இன்று (15/01/2026) முதல் (18/01/2026) வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை சங்கமம் கலைவிழாவில், உணவும் மற்றும் கலையினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்காவில் பீப் ஸ்டாலில் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சங்கமம் கலைவிழாவில், உணவுப் பொருட்களும் கலைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா ஆகிய இடங்களில் பீப் உணவுப் பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisment