ஓணம், மிலாடி நபி, வர விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் பணிபுரியக்கூடிய பலர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் வழக்கம்போல் செயல்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னையை நோக்கி வாகனங்கள் வருவதால் இன்று மாலை முதலே செங்கல்பட்டு முதல் கிளாம்பாக்கம் வரை விட்டுவிட்டு போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.