தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது.

Advertisment

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்த மிதமான மழைக்கே சென்னை தத்தளிக்கிறது என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertisment

சென்னையில் மழை பெய்த இடங்களை ஆய்வு செய்த தமிழிசை பேசுகையில், ''இன்னைக்கு பொருத்தமட்டில் மழையில் சென்னை தெளித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு டிராமா போட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கு வருவது அங்கே போவது என டிராமா போட்டுகொண்டு இருக்கிறார்கள். நான் கேட்கிறேன் துணை முதலமைச்சர் உதயநிதி சொல்லுகிறார் யாரோ ஒருத்தர் ட்விட் போட்டாராம். உடனே அங்கே போனாராம். ஏரியைத் தூர்வாரினார்களாம். நான் கேட்கிறேன் அதிகாரிகள் வேலை செய்யவில்லையா? சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்யவில்லையா? ஏதோ ஒரு ட்விட் போட்ட உடனே அதை விளம்பரப்படுத்தி மழையில் அந்த தம்பியை நிற்க வைத்து சொல்ல சொல்லி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஐந்து முறை ஆட்சி செய்து இருக்கிறார்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கனவெல்லாம் ஸ்டாலின் அவர்களே மறந்துவிடுங்கள். அந்த அளவிற்கு மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். முதல்வரை பொறுத்தவரை அவர்களுக்கு முழு கவனமும் வாக்காளர் சிறப்பு முகாம் பற்றி தான். மழை முகாம் மீது கூட ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. வாக்காளர் சிறப்பு முகாம் பற்றி ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. இன்று மழைக்கு செய்ய வேண்டிய ஏற்பாட்டை விட நாளைக்கு சிறப்பு முகாமை பார்த்து புலி வருது புலி வருது என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். பதட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உண்மை வெளிவந்து விடப் போகிறது என்ற பயம். உண்மையிலேயே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டால் இவர்களுக்கு பிரச்சனையாகிவிடும். போலி வாக்காளர்களால் தான் இவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்'' என்றார். 

Advertisment