நாட்டையே பெரும்பாடு படுத்தி வருகிறது நாய்க்கடி சம்பவங்களும் ஆதனால் ஏற்படும் உயிரிழப்புகளும். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது.

Advertisment

மறுபுறம் தெருநாய்களை அகற்றுவது என்ற போர்வையில் அவற்றை அவதியுற வைக்கக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வாங்கி வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று (19-12-25) மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிட்புல், ராட்வீலர் இன நாய்களை நாளை முதல் வாங்கி வளர்த்தால் அவர்களுக்கு  ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் பிரியா, “தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.