Advertisment

வீடு இல்லாதவர்களுக்குத் தற்காலிக இருப்பிடம்; சென்னை மாநகராட்சி அதிரடி!

chennaicorporation

Chennai Corporation announce provide temporary accommodation for the homeless

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ரிப்பன் பில்டிங்கில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும், மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை உருவாக்கப்படும், அடுத்ததாக, வீடு இல்லாதவர்களுக்கு 12 கோடி செலவில் தற்காலிக இருப்பிடம் அமைத்துத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து, தொற்று நோய் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவு கட்டிடம் உருவாக்கத்திற்கு 6 கோடி ஒதுக்கீடு, 14 மண்டலங்களிலும் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகள், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும், கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் எச்பிவி சோதனை கருவிகளைக் கொள்முதல் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றன.

Advertisment

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் மீதான விவாதம் மாமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்றது. பின்னர், விவாதத்திற்குப் பிறகு இந்த பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 இருந்தது குறிப்பிடத்தக்கது.

chennai corporation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe