சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சியில் கடந்த 2025 ஆண்டு மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களிடமும் , பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த புத்தக கண்காட்சி. வழக்கம் போல இந்த ஆண்டும் அதே ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த 49வது புத்தக கண்காட்சி ஜனவரி 07, 2026 அன்று தொடங்கி ஜனவரி 19, 2026 வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் என பபாசி அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/19/q2-2025-12-19-16-30-06.jpg)
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 900 அரங்குகள் அமைக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்கும். இந்த திருவிழா இனிதே நடைபெறும் பொருட்டு இன்று (19-12-25) நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் நக்கீரன் ஆசிரியர் உட்பட பபாசி அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/p-2025-12-19-16-29-10.jpg)