Advertisment

சென்னை புத்தகக் காட்சி; வாசிப்பு விழிப்புணர்வு நடை!

v2

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தக காட்சி நடைபெறும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்த புத்தக காட்சியில் கடந்த 2025 ஆண்டு மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த புத்தக காட்சி. 

Advertisment

வழக்கம் போல இந்த ஆண்டும் அதே ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த 49வது  புத்தக காட்சி இந்த வருடம் ஜனவரி 08 அன்று தொடங்கி ஜனவரி 21  வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் என பபாசி அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 900 அரங்குகள் அமைக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்கும். 

Advertisment

49-வது சென்னை புத்தக காட்சியை முன்னிட்டு வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக  நந்தனம் ஆவினில் தொடங்கி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானம் வரை  நடை பயணம் நடைபெற்றது. சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

"புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தான விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது “தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் நடைபெறும் புத்தக காட்சிக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவது மிகவும் பெருமையாக உள்ளது. ஒரு நூலகம் உருவாகும் பொழுது பல சிறைக் கதவுகள் மூடப்படுகிறது. எழுத்தாளர்கள் என்பவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் முக்கியமானவர்கள் என்று பேசினார்.

n2

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும் போது “நூலகத்தின் பொற்காலம் திமுக அரசின் ஆட்சி காலம் தான், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்டம் தோறும் புத்தக காட்சிகள் நடைபெற்று வருகிறது, அதற்கு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  அடுத்து வரும் 50 -வது புத்தகக் காட்சியையும் முதலமைச்சர் தான் தொடங்கி வைப்பார்.  வருடம் தோறும் இந்த புத்த திருவிழாவை திறந்து வைப்பது மட்டுமல்லாமல் இதற்கான நிதியையும் வழங்குவார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த நிகழ்வு வருங்காலத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த விழாவை ஏற்பாடு செய்த எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களுக்கும்,  மேயர் பிரியா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

bapasi book fair chennai book fair
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe