Advertisment

“கேடு கெட்ட மலிவான அரசியல்” - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு!

mks-mdu-speech

மதுரை மாவட்டம், சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ. 150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு "வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்" என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07.12.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து டி.என். ரைசிங் (TN Rising) முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து உத்தங்குடி, கலைஞர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நம்முடைய சிந்தனை எல்லாம், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி முன்னேற்றம்தான். ஆனால் சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சனையைக் கிளப்பி நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று  நினைக்கிறார்கள். காலங்காலமாக கார்த்திகை தீபத்துக்குத் திருப்பரங்குன்றம் முருகர் கோவியில் தீபம் ஏத்துகிறது மாதிரி கடந்த மூன்றாம் தேதி மாலை 6 மணிக்கு பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன் பிறகு அதே நேரத்தில் உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி சாமி புறப்பாடாகி 16 கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கக்கூடிய இடத்தில் சொக்கப்பானை ஏற்றி சாமிக்கு ரக்கை சாத்தப்பட்டது. 

Advertisment

இதெல்லாம்  இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முறையாக நடந்தது. இதெல்லாம் உள்ளூர் மக்களுக்கு உண்மையான பக்தர்களுக்கு நல்லா தெரியும். அவர்கள் எல்லாம் நல்லபடியா தரிசனம் செய்து விட்டுத்தான் வீட்டுக்குப் போனார்கள். ஆனாலும் இப்போது என்ன காரணத்துக்காகப் பிரச்சனை நடக்கிறது. இந்த பிரச்சனையைக் கிளப்புகிற கூட்டத்தின் நோக்கம் என்னவென்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் ஆன்மீகம் என்பது மன அமைதியை, நிம்மதியைத் தந்து மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். 

thiruparankundram-issue-bjp-nainar-h-raja

நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சில அரசியல் லாபங்களுக்காகப் பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி சமூகத்தைத் துண்டாக்கச் சதி செய்வது நிச்சயமாக ஆன்மீகம் அல்ல. அது அரசியல். அதுவும் கேடு கெட்ட மலிவான அரசியல். தீபம் எங்கே ஏற்றப்படவேண்டுமோ எப்போது ஏற்றப்படவேண்டுமோ அங்கே வழக்கம் போலச் சரியான முறையில் எற்றப்பட்டுள்ளது” எனப் பேசினார். 

karthigai deepam festival madurai mk stalin Thiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe