Changes in Chennai Metro service Photograph: (chennai)
சென்னையில் மெட்ரோ சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் காரணமாக செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை கோயம்பேடு அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ரயில் சேவை இருக்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு அசோக் நகர் இடையே 10 நிமிட இடைவெளியில் சிறப்புப் பேருந்துகள் அந்த பகுதியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.