இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''இந்த கட்சிகள் ஏதாவது டாஸ்மாக் கடையை நான் வந்தால் மூடுவேன் என்று சொல்கிறார்களா பாருங்கள். விஜய் கூட பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று படுகிறாரே ஒழிய நான் வந்தால் டாஸ்மாக் கடையும் மூடுவேன் என சொல்ல மாட்டேன் என்கிறார். சித்தாந்த மாற்று வேணும். திமுகவின் திராவிட சித்தாந்தத்துக்கு மாற்று என வேறு கொள்கையை வச்சுதான் ஒழிக்க முடியுமே ஒழிய. கொள்கை இல்லாத இந்த கூட்டத்தை வைத்து சரி வராது.

Advertisment

எனக்கு இந்தி ஒழிக அல்ல தமிழ் வாழ்க தான். திராவிடம் ஒழிக அல்ல, தமிழ் தேசியம் வளர்க, வெல்க தான். நீங்க தோக்கணும் என்பது அல்ல என்னுடைய நோக்கம், நான் ஜெயிக்கணும், தமிழ் தேசியம் வெல்லணும் அதுதான் என்னுடைய நோக்கம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் மாற்று யாரு? அதிமுக இல்ல. ஏனென்றால் தீமைக்கு மாற்று ஒரு தீமை இல்லை. அது எங்கள் நிலைப்பாடு, கோட்பாடு. நபிகள் நாயகத்திடம் இந்த தீமை எப்படி ஒழிப்பீங்க என்று கேட்கிறார்கள் 'நன்மையை வச்சுதான்' என்கிறார். நெருப்புக்கு மாற்று நெருப்பு அல்ல. நெருப்பை அணைக்க தண்ணீர் தேவைப்படுகிறது . அந்த தண்ணீர் யார். இந்த திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஒரே ஒரு இடத்தில் கொள்கை மாற்று இருக்கா? இங்க கொடியில் அண்ணா இருப்பார் அங்க இருக்க மாட்டார் அதைத் தாண்டி வேற ஏதாவது கொள்கை மாற்று இருக்கா?  இவங்க வந்தா கமிஷனே வாங்காம இது நடக்கும், இவங்க வந்தா சாராயம் இருக்காது, இவங்க வந்தா மலைய வெட்ட மாட்டாங்க, இவங்க வந்தா மண்ண அல்ல மாட்டாங்க, இப்படி ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்.

Advertisment

எனவே இங்கு கோட்பாடு என்பதுதான் மாற்று. இந்தியம் என்பது உருவாக்கப்பட்டது. திராவிடம் என்பது ஏமாற்று திருட்டு கூட்டம். இந்தியம், திராவிடம் என்ற இரண்டு கோட்பாடும் பொய் என தமிழ் தேசியத்தை முன்னெடுக்கிறோம். தமிழனின் தேசம் தமிழ் தேசம், நாடு தமிழ் நாடு, இங்கு வாழ்கிற மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வேளாண்மை ,தொன்றுதொட்ட மேளாண்மை, அவனுடைய வழிபாட்டு முறை, மெய்யியல் கோட்பாடு, பெண்ணிய உரிமை, பொருளாதார வளர்ச்சி, கல்வி, வேலை. கடல் வளம். காட்டு வளம். கனிம வளம். நீர் வளம். மலைவளம். மணல் வளம் எல்லாற்றையும் காப்பது இதுக்கு ஒரு அரசியல் இருக்கு இந்த அரசியல் தமிழ் தேச அரசியல் என்ற ஒரு கோட்பாடு அதுக்கு மாற்ற இதுதான இருக்க முடியும்'' என்றார்.