வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவிற்கு வரும் போது விலைமதிப்பு மிக்க பொருட்களைக் கொண்டு வந்தால், அதற்குச் சுங்க வரி செலுத்த வேண்டும். இந்த விதி, விமானங்கள் மட்டுமல்லாமல் கப்பல்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், குறிப்பிட்ட மதிப்பு வரையிலான பொருட்கள் மற்றும் தங்கத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூபாய் 50000 மதிப்பு வரையிலான தங்க நகைகளை மக்கள் தங்கள் உடைமைகளுடன் கொண்டு வர அனுமதிக்கப்பட்டிருந்தது. அதற்கு எந்த வரிகளும் விதிக்கப்படாமல் இருந்தது. 

Advertisment

தற்போது அந்த விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய விதிகளின் படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் வசிப்பவர்கள் மற்றும் பிற விசாக்களின் மூலமாக வந்த வெளிநாட்டவர்கள் ரூபாய் 75000 வரையிலான மதிப்பு உள்ள பொருட்களை வரியின்றி கொண்டுவரலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ரூபாய் 25000 வரையிலான மதிப்பு மிக்க பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

அதாவது, ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த "உடைமை விதிகள் 2016" -ல் நம் நாட்டின் மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டில் ஓராண்டிற்கு மேல் வசிப்பவராக இருந்தால் 40 கிராம் வரையிலான தங்கம் கொண்டு வரலாம் எனவும், ஆண்களாக இருந்தால் 20 கிராம் வரையிலான தங்கம் கொண்டுவரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.