கர்நாடகாவிலுள்ள பெங்களூருவின் அனேகல் தாலுகா, சந்திராபூரைச் சேர்ந்தவர் போதேவையா. இவரது மனைவி பரிமளா ஆவார். இந்த தம்பதியினருக்கு யஷஸ்வினி என்ற மகள் உள்ளார். 23 வயதான யஷஸ்வினி, பொம்மனஹள்ளியில் உள்ள புகழ்பெற்ற பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் கதிரியக்கத் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று தனது வீட்டில் யஷஸ்வினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அனேகல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து யஷஸ்வினியின் தாயார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதன்படி, “கடந்த புதன்கிழமை யஷஸ்வினி கண்ணில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் வியாழக்கிழமையன்று கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள், யஷஸ்வினியை கல்லூரிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளனர். அதற்கு மாணவி கண் தொற்று ஏற்பட்டதாக கூறியதையடுத்து, அப்படியானால் கண்ணுக்கு என்ன சொட்டு மருந்து பயன்படுத்தினாய்?.
எத்தனை சொட்டுகள் விட்டாய்?. இல்லை மருந்தை முழுவதுமாக ஊற்றிகொண்டயா? எனக் கிண்டல் செய்துள்ளனர். மேலும், மாணவி நிறம் குறித்தும், தனது உடை குறித்தும் சக மாணவர்கள் முன்னிலையில் கேலி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிரது. இதனால் மனமுடைந்த மாணவி, திங்கட்கிழமையன்று வீட்டில் தற்கொலை செய்துகொடுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு, ஆக்ஸ்போடு கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/siren-police-2026-01-12-23-49-27.jpg)
மேலும் மாணவர்கள், ”யஷஸ்வினி புத்திசாலி மாணவி, ஆனால் கல்லூரியின் துன்புறுத்தல்களும், கேலியும் அவளது உயிரைப் பறித்துவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கல்லூரி முதல்வர் மீதும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/ka-college-stu-2026-01-12-23-48-49.jpg)