தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (22.02.2025) காலை 07:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/22/rain-our-4-2026-02-22-08-02-09.jpg)