Advertisment

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

chennai-rmc

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (30.11.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் விழுப்புரம், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (30.11.2025) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அதே போன்று  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று  காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை ஒட்டியுள்ள திட்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று (30.11.2025) அதிகாலை இந்திய நேரப்படி 02.30 மணிக்கு அதே பகுதிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

north east mansoon cyclone ditwah weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe