மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்களின் பெயரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமைந்துள்ள  ஆளுநர் மாளிகை ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மாளிகைகள் ராஜ் நிவாஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. 

Advertisment

இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ராஜ்பவன் என்பது மக்கள் பவன் என மாற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இனி அதிகாரப்பூர்வமாக ராஜ்பவன் என்பதை இனி மக்கள் பவன் என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று  ராஜ் நிவாஸ் என்பது லோக் நிவாஸ் என அழைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.