பண்டிகை காலத்தையொட்டி தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ஒரு லட்சத்து ஆயிரத்து 603 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 18 ஆயிரத்து 227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதிப் பகிர்வில் மீண்டும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Advertisment

மேலும் குஜராத் மாநிலத்திற்கு 3 ஆயிரத்து 534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு 7 ஆயிரத்து 976 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 6 ஆயிரத்து 418 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள பீகாருக்கு 10 ஆயிரத்து 219 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த வரிப்பகிர்வு நிதி மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.