Central government decision buy cough medicine without a doctor's prescription
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ‘கோல்ட்ரிஃப்’ என்னும் இருமல் மருந்தை குடித்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக் செயழிப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதன் எதிரொலியாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ரீசன் ஃபார்மாசூட்டிகல் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதே சமயம் இந்த இருமல் மருந்தைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இனிமேல் இருமல் மருந்து வாங்க முடியாது என மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் எழுத்துப்பூர்வமான பரிந்திரையின் பேரிலேயே மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும், மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Follow Us