கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. 

Advertisment

இந்த வழக்​கில் தவெக பொதுச் செய​லா​ளர் என். ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சிடிஆர்​.நிர்​மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் மதி​யழகன் மற்றும் மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி. ஜோஸ் தங்​கையா உள்​ளிட்ட காவல் அதி​காரி​கள் டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​தில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி ஆஜராகினர். அவர்​களிடம் 3 நாட்​கள் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. மேலும், டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​தில் வரும் 12-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக தலை​வர் விஜய்க்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது. 

Advertisment

இந்​நிலை​யில், கரூரில் சம்​பவம் நடந்த வேலு​சாமிபுரத்​தில் மத்​திய உள்​துறை அமைச்சக விவ​காரத் துறை அதி​காரி தலை​மை​யில் மத்​திய தடய அறி​வியல் ஆய்​வகக் குழு​வினர் 10-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர். விஜய்யின் பிரச்சார வாக​னம் நிறுத்​தப்பட்டிருந்த இடம், சாலை​யின் அகலம் உள்​ளிட்​ட​வற்றை அளவீடு செய்​தனர். அவற்றை வீடியோ பதிவு செய்​து, புகைப்பட​மும்​ எடுத்​துக்​ ​கொண்​டனர்​. பின்னர் நெரிசலின்போது உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் குடும்பத்தினரிடம் நெரிசல் சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பொங்கலுக்கு இடையே விஜய்க்கு சம்மன், விஜய் நடித்த ஜன நாயகன் படம் வெளியீட்டில் தாமதம் என மொத்தத்தில் மத்திய அரசின் பிடிக்குள் விஜய் இறுக்கப்படுகிறார் என்றால் அது மிகையல்ல. முன்னதாக, கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் விஜய் பிரச்சார வாகனத்தையும் சிபிஐ அதிகாரிகள் சோதனை இட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisment