சென்னை ஜிஎஸ்டி சாலையில் சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஆந்திராவில் இருந்து கோவிலம்பாக்கத்திற்கு 60 டன் எடை கொண்ட சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனால் குரோம்பேட்டிலிருந்து தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து லாரியை மீட்கும் பணியில் கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லாரி ஓட்டிக்கொண்டே வாட்டர் கேனில் இருந்து தண்ணீரைக் குடிக்க முன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த த லாரி இன்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த சாலையில் முழுவதுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாற்று வழிகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.