Advertisment

CEDOI அமைப்பின் உறுப்பினர் பதவியேற்பு விழா!

Busi

CEDOI அமைப்பின் உறுப்பினர் பதவியேற்பு விழா 'The Grand Launch 2.0' என்ற பெயரில் நாளை மதுரை 'Courtyard by Marriot' ஹோட்டலில் காலை 09 மணி அளவில் நடைபெற உள்ளது.

CEDOI அமைப்பு தமிழகம் முழுவதும் தொழிலதிபர்களுக்கும் தொழில்முனைவோரையும் உறுப்பினராகக் கொண்டு அவர்கள் வளர்வதற்கான பணிகளை நிறுவனர் ரியாஸ் தலைமையில் செய்துவருகிறது. அடுத்த முக்கிய நிகழ்வாக நாளை நடக்கும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக டெம்பிள் சிட்டி ஹோட்டல்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே.எல்.குமார், கிரியேட்டிவ் இஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் ராதாகிருஷ்ணன், சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் எக்சிகியூட்டிவ் ஆபீசர் சீனி முகமது அலியர் மரக்காயர், சாய்ரா ஸ்கின்ஸ் உரிமையாளர் ஷபா, கல்வி குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் செந்தில்குமார், ஹெவன்ஸ் பார்க் ரெஸ்டாரண்ட் நிர்வாக இயக்குநர் சாதிக் ராஜா, ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வினை CEDOI நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் ரியாஸ் மற்றும் மதுரை கிளையின் இயக்குநர் சுந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

Advertisment
madurai Business
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe