கொலை  வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட எண்ணூர் காவல் நிலையத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் மரியம் பீவி என்பவர் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், 'தன் வீட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்தவரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். அப்போது இருந்த அதிகாரிகள் கொலை குற்றம் நடந்திருப்பதை உறுதிசெய்து உடனே முதல் தகவலை பதிவு செய்து, கொலை குற்றவாளியான ராஜேந்திரன் என்பவரை தேடி வந்துள்ளனர். அந்த நேரத்தில் ராஜேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை வருடமாக இந்த வழக்கில் எதிரி கைது செய்யப்படாமல் இருந்தது தெரிந்தது.  

Advertisment

கொலை செய்தவரின் பெயர் ராஜேந்திரன். அவரது அப்பா பெயர் பரமசிவம், ஊர் கடலூர் என்பது மட்டும்தான் போலீசாருக்கு கிடைத்த தகவலில் இருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தின் தேர்தல் வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வு செய்தபோது ராஜேந்திரன், அப்பா பெயர் பரமசிவம் என்ற லிஸ்டில் எட்டுக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்த்து போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பலர் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என தெரிந்தது.

ஆக்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மீது மட்டும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் மதம் மாறியதும் தெரிந்தது. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர் பார்ம் பூர்த்தி செய்வது போல் நடித்த போலீசார் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று எஸ்.ஐ.ஆர் பார்மை பில் பண்ணுவது போல் நடித்துள்ளனர். பின்னர் சந்தேகப்படும் ராஜேந்திரன் வீட்டுக்கும் சென்று எஸ்.ஐ.ஆர் குறித்து சொல்லி எல்லா தகவலையும் கைப்பற்றினர். வீட்டுக்கு வராமல் சாம்பிராணி போடும் தொழில் செய்து வரும் ராஜேந்திரனின் மறுபெயர் ரஃபிக் என தெரிந்தது. பெங்களூரில் ராஜேந்திரன் இருப்பதை அறிந்து அங்கு சென்று பிடித்த போலீசார் அவர் கொலை செய்ததை உறுதி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Advertisment

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் எஸ்.ஐ.ஆரரை சாக்காக வைத்து குற்றவாளியை பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.