நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (23-11-25) புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆரை கொண்டு வரும் மம்தா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருக்கிறது?. பூத் லெவல் ஆபிசரை போட்டது யார்?. திமுக தானே?” என்று ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment

100
Case registered against Seeman for sensational complaint Photograph: (seeman)
Advertisment

உடனே ஆவேசப்பட்டு எழுந்து நின்ற சீமான், “உனக்கு என்ன தம்பி பிரச்சனை? டேய், அரசு தேர்தல் ஆணையத்தை கேட்கிறதா? தேர்தல் ஆணையத்தை, அரசு கேட்கிறதா? முதலில் உனக்கு என்ன பிரச்சனை? இங்கே தள்ளி வா... காமெடி பண்ணிட்டு அலையாதீங்க...” என்று கோபமாகப் பேசினார். அப்போது, நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டிருக்கிறதே? என அந்த செய்தியாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், “நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என்று வழக்கு போட்டார்களா?” என்று கூறி அந்த செய்தியாளரை நோக்கி, “உன்னை இன்னைக்கு இல்ல, ரொம்ப நாளா பார்க்கிறேன். உனக்கு எதாவது பைத்தியம் ஆகிடுச்சா? கேள்வி கேள்வியா கேளு” என்று கோபப்பட்டு பேசினார்.

சீமான் செய்தியாளரை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர் கொடுத்த புகாரின் பேரில் தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுதல், தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் புதுச்சேரி வில்லியனூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.