Advertisment

நா.த.க. நிர்வாகியின் பேக்கரியை சேதப்படுத்திய வழக்கு; தி.மு.க. கவுன்சிலர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு!

inves

ஈரோடு மாவட்டம் நசியனூர் பள்ளிபாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வணிக சங்கத்தின் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளரான நித்தியகுமார் என்பவர் பேக்கரி நடத்தி வளர்ந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மனோகரன் என்பவருக்கு சொந்தமான கடையை 15 ஆண்டுகளுக்கு நித்திய குமார் ஒப்பந்தம் எடுத்துள்ளார்‌. 

Advertisment

இந்நிலையில்,மனோகர் உயிரிழந்த நிலையில் அவரது உறவினரான சித்தோடு பேரூராட்சி திமுக கவுன்சிலர் கோவேந்திரன் வாடகையை வசூல் செய்து வந்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு கோவேந்திரன் கடை வாடகை உயர்த்தி கேட்ட விவகாரம் தொடர்பாக சித்தோடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (23.12.2025) இரவு நித்தியகுமாரின் கடைக்குள் புகுந்த கோவேந்திரன் உள்பட 18 நபர்கள் கடையை காலி செய்யக்கோரி அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

Advertisment

மேலும்,கடையில் பணிபுரிந்த 6 ஊழியர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்ததாக சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், திமுக கவுன்சிலர் கோவேந்திரன் உள்பட 18 நபர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில்,55 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நித்தியகுமார் புகாரில்தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

dmk bakery case filled Councillor Erode Naam Tamilar Katchi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe