Case filed Jayalalithaa Peravai district president for property fraud from Singaporean woman
சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜூதீன். இவருக்கு தஞ்சாவூர் நகரையொட்டி நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகர், மற்றும் செங்கிப்பட்டியில் பல நூறு கோடிக்கான சொத்துகள் உள்ளது. இவர் கடந்த 2015 ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அதன் பிறகு, அவரது மனைவி முகமதா பேகம் (76) என்பவரிடம் தஞ்சையில் உள்ள அந்த சொத்துகளை பராமரிப்பதாக ஸ்ரீவித்யா சுமதி என்பவர் நம்பிக்கையாக பேசியதால் சொத்துகளை பராமரிக்க அனுமதி கொடுள்ளார். ஆனால், ஸ்ரீவித்யா சுமதி தனக்கு தெரிந்த தஞ்சை மைய மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில் குமாருடன் கூட்டுச் சேர்ந்து மோசடியாக தனது உறவினர்கள் பெயருக்கு சொத்துகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து முகமதா பேகம், கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கேபிள் செந்தில் உள்பட 12 பேர் மிது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Follow Us