தமிழக அமைச்சர்களுக்கு எதிராகவும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். சிபிஐ வசம் இதன் புலன் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி கருப்பையா காந்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், “அமைச்சர், முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீது முன்னதாக வழக்கு தொடர அனுமதி வழங்கிவிட்டு அதன் பின்னர் அந்த விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் திரும்பப் பெறவில்லை.
குற்றவியல் வழக்குகள் கைவிடப்படவும் இல்லை” என உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இதற்குப் பதிலளிப்பதற்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வேண்டிய நிலையில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.