கிருஷ்ணகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலைப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ், வெங்கட் சாமி என்பவர்கள் ஏழு பேராக குடும்பமாக காரில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.  சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று விட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ஜிஞ்சுபள்ளி என்ற கார் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பல்டி அடித்த கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த கிரிஜா, மம்தா ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.