உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று (20-01-26) அதிகாலையில் ஜாகுவார் காரில் ஃபலாக் அகமது (19), அன்ஷ் (19), ஆயுஷ் பாட்டி (17) மற்றும் நீல் பன்வார் (18) என நான்கு பேரும் நொய்டா-பங்கேல் மேம்பாலச் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் அருகில் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றது. இந்த நிலையில், கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இருப்பினும், ஃபலாக் அகமது உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மற்ற மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாக் கூறப்படுகிறது.
அதே சமயம் லாரி ஓட்டுநர், வண்டியை நிறுத்தாமல் தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட லாரியின் பதிவு என்னை கண்டறியும் நோக்கில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி (SHO) சுனில் குமார் கூறுகையில், “அதிகாலை 3:30 மணியளவில், பங்கேல் மேம்பாலச் சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக 112 என்ற அவசர உதவி எண்ணுக்கு அவசர அழைப்பு வந்தது. இந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போது நான்கு பேரும் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டு, மறுத்த்துவமனையில் கொண்டு சேர்த்தோம். இருப்பினும் பலாக் என்பர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் உயிரிழந்த பலாக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மற்றவர்கள் ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாகத் தெரிய வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் புகார் அளித்த பிறகு, அடுத்தகட்ட விசாரணை தொடங்கும்" எனத் தெரிவித்தார். இந்த நிலையில், அந்த நான்கு பேரும் நூலகத்தில் ஒன்றாக படித்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அளித்த வாக்குமூலங்களை வைத்தே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரியவருகிறது. அதே நேரத்தில் லாரி ஓட்டுநரை கைது செய்யும் பொருட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Follow Us