Campaign vehicle approaches Erode; volunteers take selfies Photograph: (erode)
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைவரும் உற்சாகமாக தேர்தல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் மிக நீண்ட கால பாரம்பரிய கட்சிகளுக்கு இணையாக தற்போது நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்து வந்தார்.
கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக முழுவதுமாக நிலைகுலைந்தது தவெக. அந்த சம்பவத்திற்கு பிறகு கட்சி தலைமைகள் பொதுமக்களை சந்திக்கவில்லை. மேலும் கட்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பிருந்து தங்கள் கட்சிப்பணிகளை தொடங்கிய தவெக மீண்டும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய், பாண்டிச்சேரி மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசினார். இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற வகையில் பேசியிருந்தார்.
அதிமுக விலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் செங்கோட்டையன் தலைமையில் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (18-12-25) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்துள்வதற்காக விஜய்யின் பிரச்சார வாகனம் சேலம் வந்தடைந்தது. அப்போது தொண்டர்கள் வாகனம் வரும்போது செல்பி எடுத்தனர்.
Follow Us