கோப்புப்படம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 23ஆவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (05.02.2026) நன்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/tn-sec-mks-2026-02-05-07-24-45.jpg)
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் (சட்டமன்ற தேர்தல் காரணமாக) இடம்பெறக் கூடிய முக்கிய அறிவிப்புகள், அதற்கான செலவினங்கள், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us