பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (14.08.2025) காலை 11 மணி அளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை  சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

Advertisment

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், சுதந்திர தின அறிவிப்புகள், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டம் இயற்றுதல்குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வர உள்ள முக்கிய தொழில் திட்டங்கள் குறித்தும், விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.