Cabinet meeting chaired by the Chief Minister of Tamil Nadu today
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (06-01-26) சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபைக் கூட்டத்தொடருக்கான ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், நிதிநிலை அறிக்கைக்கான முக்கிய முடிவு, பொங்கல் பரிசு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய தொழில் துறை நிறுவனங்களுக்கு ஒப்புதல், விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஒப்புதலுடன் ஜனவரி 20ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் வாசிக்கவுள்ளார். ஜனவரி 20ஆம் தேதியன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us