Advertisment

தொழிலதிபர்கள் கொலை வழக்கு; ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

hsra-encount-ins

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான பொம்மசந்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிரசாத் ரெட்டி. இவர் அப்பகுதியில் ஏலச் சீட்டு கம்பெனியை  நடத்தி வந்துள்ளார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இழந்த பணத்தை மீட்பதற்காக வசதி படைத்த தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 4ஆம் தேதி (04.11.2025) சித்தனகல்லி என்ற இடத்திற்குச் சென்ற ரவி பிரசாத் ரெட்டி அவருக்குத் தெரிந்த மாதேஷ் என்பவரிடம் முதலில் பணம் கேட்டுள்ளார். 

Advertisment

அவர் பணத்தைக் கொடுக்காததால் அவரை, அவரது வீட்டிலேயே கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். அதே சமயம் ரவி பிரசாத் ரெட்டிக்குப் பணம் தேவைப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக, ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரைக் கடந்த 6ஆம் தேதி காரில் கடத்தி சென்றுள்ளார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாலப்பா ரெட்டியின் குடும்பத்தினர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரவி பிரசாத் ரெட்டிக்கு அவர் கேட்டபடி பணம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

Advertisment

இதனால் கடும் ஆத்திரமடைந்த ரவி பிரசாத் ரெட்டி, பாலப்பா ரெட்டியை வெட்டி கொலைசெய்துள்ளார். அதன் பின்னர் அவரது உடலைத் தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் உடலை வீசி சென்றுள்ளார். மற்றொருபுறம் பாலப்பா ரெட்டி கடத்தல் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று (08.11.2025) இரவு ரவி பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது ரவி பிரசாத் ரெட்டி போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இன்ஸ்பெக்டர் சோமர் என்பவர் தலைமையிலான போலீசார் ரவி பிரசாத் ரெட்டியில் இரு கால்களிலும் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த  ரவி பிரசாத் ரெட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொழிலதிபர்கள் இருவரைப் பணம் கேடு மிரட்டி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hosur Businessmen police karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe