டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் பணிமூட்டம் காரணமாக பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களில் கடுமையான பணிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக, பணிமூட்டம் காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பணி மூடி இருப்பதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் பணிமூட்டம் காரணமாக பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு பேருந்துகளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டதை அடுத்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.