சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில், “கண்ணாடி உடைந்த அரசு பேருந்தில் பயணிகள் செல்கின்றனர்” எனக்  குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது திரிக்கப்பட்ட தகவல். 20.08.2025 அன்று காலை 8 மணியளவில் குழித்துறை கிளை -2, பேருந்து எண் TN 57 N 1913 தடம் எண் 85A - பனச்சமூட்டிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி வரும் போது கல்லுப்பாலம் அருகே லாரி மோதியது. இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி கழன்றது. கண்ணாடியை அகற்ற முடியாததால், கயிறு கட்டப்பட்ட நிலையில் இராணித்தோட்டம் மத்திய தொழிற்கூடத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்டது. அந்த பேருந்தில் பயணிகள் யாரும் செல்லவில்லை என அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் விளக்கமளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.