கோவை மாவட்டம் சோமனூரில் இருந்து காந்திபுரத்திற்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சம்பவதன்று தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சோமனூரில் இருந்து பைபாஸ் சாலை வழியாக காந்திபுரத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது சூலூர் பிரிவு அருகே பேருந்து வந்த போது, ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாகச் சென்றது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.
இதனிடையே பேருந்து சாலையின் இரு பக்கங்களையும் பிரிக்கும் மையத் தடுப்பின் மீது ஏறி நின்றது. பேருந்தில் பயணித்த பயணிகள் எந்தவித சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட பயணிகள் சிலர், வலிப்பு ஏற்பட்ட ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பட்டது.
இதனிடையே பைபாஸ் சாலையின் மையப் பகுதியில் பேருந்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த ஓட்டுநர் ஒருவர் சாலையின் நடுவே நின்றிருந்த தனியார் பேருந்தை அங்கிருந்து அகற்றினார்.
சூலூர் பிரிவு அருகே ஓடிய தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைபாஸ் சாலையின் மையத் தடுப்பின் மீது ஏறி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/17/01-2025-11-17-17-27-30.jpg)