Bus driver involved in argument over collection of money at a forest inspection booth
தமிழக ஆந்திர எல்லை வனசோதனை சாவடியில் வாகனங்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக டூரிஸ்ட் பேருந்து ஓட்டுநர் வாக்குவாதம் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் வனசோதனை சாவடி உள்ளது. இந்த வன சோதனை சாவடி வழியாக நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, கல்கத்தா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் காய்கறிகள் மற்றும் எலக்ட்ரிக் இரும்பு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் லாரி மற்றும் கண்டெய்னர் மூலம் தமிழ்நாட்டிற்கு எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த வனசோதனை சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களுக்கு தலா 20 முதல் 300 ரூபாய் வரை வனத்துறை சார்பில் தினகூலிக்கு ஆட்களை நியமித்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக (ஆம்னி பஸ்) டூரிஸ்ட் வாகன ஓட்டுநர் ஒருவர் வன சோதனை சாவடி ஊழியர் மற்றும் தினக் கூலிக்கு வேலை செய்யும் நபரிடம், ‘எதற்கு இங்கு பணம் வசூல் செய்கிறீர்கள்?’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us