புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள வாழமங்கலம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கிருஷ்ணன் (வயது 55), இவர் ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

நேற்று நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக கே.ராசியமங்கலம் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றவர் ஆர்ச் அருகே வண்டியை நிறுத்தி தலைக்கவசம் அணிந்த போது அங்கு நின்ற மர்ம நபர்கள் கிருஷ்ணனை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் அவரது கையில் மோதிரங்கள் அணிந்திருந்ததை மர்ம நபர்கள் கவனிக்காமல் வேகமாக சென்றுவிட்டனர். காயத்துடன் வந்து ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment