மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிதம்பரத்திலிருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் புத்தூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டுக்குள் புகுந்தது.
இதில் வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சரண்யா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சங்கர் என இருவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.