விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார்ப் பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த தனியார்ப் பள்ளியின் வேன் இன்று வழக்கம்போல்மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வந்த தனியார் பேருந்து  மோதி  கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.