குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில், தலஜா நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயதான இளம்பெண். இவர், தனது பெற்றோர் மற்றும் தனது 29 வயதான மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வருகிறார். அந்த  சகோதரர் திருமணமானவர். 

Advertisment

இந்நிலையில், ஜூலை 13 அன்று, அவரது மனைவி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் தனது சகோதரியை கத்தி முனையில் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்டு 22 அன்று, இரண்டாவது முறையாகவும் அவர் தனது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அத்துடன், அவரது வலது தொடையில் பீடியால் சூடு வைத்து காயப்படுத்தியுள்ளார்

இதனால், மனமுடைந்த அந்த இளம்பெண் இந்த முறை துணிச்சலாக புகார் அளிக்க முடிவு செய்து, 181 மகளிர் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் தலஜா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனது சகோதரர் மீது புகார் பதிவு செய்தார். விசாரணையில், அந்த இளம்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த விவரம் அவரது சகோதரருக்கு முன்பே தெரிந்திருந்தது. அவர் இந்தக் காதல் உறவை முறிக்கச் செய்யும் வகையில்,அதைப் பயன்படுத்தி  பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை அதிகாரி டி.பி. காம்பிளா கூறுகையில், “குற்றவாளி பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.