Broken rail - panic near Ranipet Photograph: (train)
ராணிப்பேட்டை அருகே இரவு நேரத்தில் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்பட்டது பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சரியாக 9 மணிக்கு வேலூர் கண்ட்ரோல்மென்ட் நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சித்தேரி ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு புறப்பட்டபோது வித்தியாசமான சத்தம் உணரப்பட்டது. இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ததில் ஒரு பகுதியில் தண்டவாளம் உடைந்து இருந்தது தெரிய வந்தது. சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் அவ்வழியாக செல்லும் கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் மங்களூர் மெயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து உடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Follow Us