சிதம்பரம் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் தேர்விஜயன்(50). இவர், இவரது அண்ணன் அருள்பிரகாசம் என்பவருக்கும், அவரது மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவரால் தானமாக வழங்கப்பட்ட தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த 14ம் தேதி இந்த பட்டாமாற்றத்தை செய்வதற்கு  வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ரூ.6 ஆயிரம் லட்சம் கேட்டுள்ளார்.கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு வாக்கூர் கிராம உதவியாளர் ரமேஷ் என்பவரும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க முன்வராத, தேர்விஜயன் இது குறித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தார்.

அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தை அவரிடம் தந்து கிராம நிர்வாக அலுவலரிடம் தருமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தேர்விஜயன் ரசாயனம் தடவிய பணத்துடன் வாக்கூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் பணம் கேட்டு, கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக பணம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சப் பணம் வாங்கிய  கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் கிராம உதவியாளர் ரமேஷ் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்துள்ளனர்.