Bribe for housing approval - City planning officer, licensed surveyor arrested Photograph: (police)
வீட்டு மனைக்கு அனுமதி கொடுப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நகர அமைப்பு அலுவலர் மற்றும் லைசன்ஸ் சர்வேயர் ஆகிய இருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு முனிசிபாலிட்டி அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் வீட்டு மனைக்கு அனுமதி தருவதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் பணத்தை நேரடியாக தர வேண்டாம் வெளியே இருக்கும் லைசென்ஸ் சர்வேயரிடம் கொடுங்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி அலுவலகத்திற்கு வெளியே இருந்த லைசன்ஸ் சர்வேயர் சக்திவேலிடம் சம்பந்தப்பட்டவர்கள் கொடுப்பதற்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இது தொடர்பாக புகார் அளித்திருந்தனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்திருந்த நிலையில் அதனைப்பெற்ற சக்திவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நகர அமைப்பாளர் சாந்தியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
Follow Us