இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் கடந்த மே மாதம் நிறைவு பெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14ஆம் தேதி பொறுப்பேற்றார். 

Advertisment

பட்டியல் சமூகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றவுடன் நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, அவரது பதவி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர் பல்வேறு வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதை அடுத்து அவர் ஓய்வு பெற இருக்கிறார். அதனால் அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, மூத்த நீதிபதி சூர்ய காந்த்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பி.ஆர்.கவாய்  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். இது தொடர்பான கடிதம் இன்றுக்குள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

suryakant
Justice Suryakant

அந்த கடிதத்தின்படி, புதிய தலைமை நீதிபதிக்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மத்திய அரசு செய்யும். அதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்று புதிய தலைமை நீதிபதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

நீதிபதி சூர்ய காந்த், தலைமை நீதிபதிக்குப் பிறகு மூத்த நீதிபதியாகவும், இந்திய நீதித்துறையின் தலைவராக வருவதற்கான வரிசையில் அடுத்தவராகவும் உள்ளார். சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், அவர் நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். இவர் வரும் பிப்ரவரி 9, 2017ஆம் வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

ழக்கமாக, தற்போதைய தலைமை நீதிபதி 65 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். அந்த நடைமுறை அடிப்படையில் தற்போது புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.