Advertisment

காலை உணவு திட்டம் விரிவாக்கம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்!

p3

இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.இதற்கான  விழா அழைப்பிதழை மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான வில்சன்,   பஞ்சாப் முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  சார்பில் விழாவுக்கு அழைத்தார். அவசியம் விழாவுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறார் முதலமைச்சர் பகவந்த்மான்.

Advertisment

திமுகவின்  சிறப்புமிகு திட்டமான காலை   உணவுத் திட்டம் மூலம்,  அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் சத்தான உணவுடன் கல்வி கற்று வருகின்றனர்.இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 26ந்தேதி  இந்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை திமுக அரசு உருவாக்கியுள்ளது.

dmk wilson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe